இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 5 அதிகார அமைப்பு பொதுவுடமை தத்துவத்தை தவிர மற்ற அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் மதம் மற்றும் கடவுளின் கருத்தை சார்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் 2600 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு யுக்தி அடிமையை "கர்ம வினையின் காரணமாக இவ்வாழ்வு அமைந்தது" என்றும் கர்மயோகத்தால் மறுமை சிறப்படையும் என்றும் கூறி உழைப்பு சுரண்டல் செய்தது இன்றளவும் வேலை செய்கிறது. (இன்றளவும் சம்பள உயர்வின்போது தனியார் நிறுவனங்களில் பகவத் கீதையின் “ கடமையைச் செய் பலனை எதிர்பாராதே ” என்ற வாசகம் அனைவரும் மத்தியில் சுழன்று கொண்டிருப்பது ஒரு வேடிக்கையான நிதர்சனமே) . மேலும் மக்களை பொதுத்தன்மையுடைவர்களாக மாற்றி, சிறப்புகளை குறைப்பதால் ஆள்பவர்களுக்கு மிக எளிமையாகிறது. எளிமையாக சொல்லப்போனால் ஆறாவது அறிவை விடுத்த மனித விலங்குகளை ஆள்வது மிகச்சுலபம். ஏதாவது ஒரு சிந்தனையினூடே மக்களுடன் உணர்வு பூர்வமாக இணைவது ஒரு அரசுக்கு தேவைப்படுகிறது. அது புதிய சிந்தனையாக இருக்கவேண்டும் என்பதில்லை. பல்லாயிரம் ஆண்டுகளின் வெற்றியான பிரம்மதத்துவமும், மறுபிறவி தத்துவமும், கர்மவினையும், கடவுளிடம் சரணாகதி என...
நான் படித்த சில புத்தகங்களையும் மெய்யியல் அறிஞர்களின் கருத்துக்களையும், என் புரிதலோடு எளிமையான வடிவில் அனைவருக்கும் பகிர விரும்புகிறேன். என் தேடல் தொடரும்.