Skip to main content

Posts

Showing posts from March, 2026

திவா

 திவா  இடம்: வால்கா நதிக்கரை மத்திய பாகம்    காலம்: கிமு 3500  இனம்: ஹிந்தோ- ஸ்லாவியர்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சியை டார்வின் விளக்கியது போலவே மார்க்ஸ், எங்கெஸ்  சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சிகளை பற்றி "குடும்பத்தின் தோற்றம்" என்ற நூலில் விளக்கியுள்ளார்கள். "திவா" காலத்தில் தாய் வழி சமுதாயமாக இருந்தாலும் அது குடும்பம் என்ற நிலையில் இருந்து குலம் மற்றும் இனக்குழு என்ற நிலைக்கு வந்தது. இதை இயக்கவியலில் விளக்கும்போது பொருளின் அளவு மாறும்பொழுது குணத்திலும் மாற்றம் ஏற்படும் என்ற கூற்றை உறுதி செய்கிறது. இனக்குழுவின் அளவிற்கு ஏற்ப தங்கும் இடம், வேட்டை முறை, குடும்ப உறவுகள், பொருள் உபயோகம் மற்றும் குழுவின் முடிவுகள் ஆகியவற்றை சில பரிணாம மாற்றங்கள் நிகழ்வது நிதர்சனமாகும். உணவு தேவைகள் மற்றும் காலநிலை மனிதனை இடமாற்றத்திற்கு தூண்டுகின்றன. மலைகளின் குகைகளில் இருந்த மனிதன் பருவ நிலைக்கு தகுந்தார் போல காடுகளிலும் நதிக்கரை ஓரங்களிலும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டனர். பனிக்காலங்களில் மலை குகைகளிலும், கோடையில் நதிக்கரை ஓரங்களிலும், இளவேனில் காலங்களில் காடுகள் மற்ற...

நிஷா

1. நிஷா  வால்கா நதி பிரதேசம் காலம் கி.மு 6000 இனம் ஹிந்தோ- ஐரோப்பியர் இந்த இடம் மலையும் மலை சார்ந்த பிரதேசமாக உள்ளது. மக்கள் மலை குகைகளில் வசிப்பவர்களாக உள்ளனர்.   தொல்காப்பியத்தின் படி இதை குறிஞ்சி நிலமாக கொள்ளலாம். ஆனால் பனிக்காலத்தில் இதை பாலையாக கருதலாம். இங்குள்ள மக்கள் தாய் வழி சமுதாய அமைப்பை கொண்டவர்களாக ஒரு குடும்பமாக இருந்தனர். அங்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உறவு தாய் தான். தந்தை , சகோதரன் இன்னும் மற்ற உறவுகள் தேவைப்படாத , ஏற்படாத காலம் ஆக இது இருந்தது. இச்சமுதாயத்தின் அனைத்தும் பொது சொத்தாகவே இருந்தது , அதனால் உறவுகள் மற்றும் படிநிலைகள் தேவைப்படவில்லை , அதிகாரம் தாயிடம் இருந்தது. ஏனெனில் அவள் தான் அனைவருக்கும் தாய் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு எந்த பிரிவினையோ , வர்க்கம் என்ற சொல்லோ அதற்கு இடமோ இல்லவே இல்லை. மேலும் செய்யும் செயல் எல்லோருக்கும் பொதுவானது அதனால் வர்ண பேதமும் இங்கு இல்லை. செய்யும் வேலையில் ஆண் பெண் பேதம் இல்லை. காதல் மற்றும் உறவு என்பது ஆண் பெண் இடையே என்றே கொள்ளப்பட்டது. யார் கணவன் என்ற கேள்வி அங்கே கிடையாது. மகனுக்கும் கணவனுக்கு...

வால்கா முதல் கங்கை வரை ஒரு பின்னோட்டம்

  வால்கா முதல் கங்கை வரை ஒரு பின்னோட்டம்.இந்நூலைப் பற்றி பதந்தானந்த கௌசல்யாயன் கொடுத்தது  ஆகச்சிறந்த முன்னுரையாகும். மனித சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமாக இந்த நூல் உள்ளது. கிமு6000 முதல் கிபி1942 வரை உள்ள முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட 20 கதைகள் நம் முன்னே காட்சிபோல உள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகளும் , தத்துவங்களும் , வேதம் மற்றும் உபநிடதங்களும் படித்து அதில் உள்ள சாராம்சத்தை எடுத்து எளிமையான கதைகளாக ராகுல்ஜி நமக்கு கொடுத்திருக்கிறார். நாம் இதை படிக்கும் பொழுது இந்தியதேசத்தில் வடபகுதியில் உள்ள மனித சமுதாயம் எவ்வாறு நாகரிக வளர்ச்சி அடைந்தது என்றும். அவர்களின் பூர்வீகம் எங்கிருந்து என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இன்றைய நிலவரத்தில் கைபர் கணவாய் வழியாக ஆரியர்களின் வருகையை மறுக்கும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு. இந்தப் புத்தகத்தில் வட இந்திய நாகரீகம் மட்டுமே ஆராயப்பட்டுள்ளது, ராகுல்ஜிக்கு தென்னிந்திய-தமிழக தொன்மையான கலாச்சாரமும் பாரம்பரியமும் அறிய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும். அப்பொழுது தமிழ் சம்பந்தமான ஆராய்ச்சிகளும் கட்ட...

முதற்படி

இது மிக யதேர்ச்சியான நிகழ்வு தான். மிக நீண்ட நாட்களாக யாரும் கண்டு கொள்ளாத நிலையில் இருந்த ஒரு புத்தகத்தை பொழுதுபோக்கிற்காக எடுத்து அமர்ந்தேன். அது முதலில் ஒரு சிறுகதைகளின் தொகுப்பு என்றே எண்ணினேன். ஒவ்வொரு கதையின் தலைப்பின் கீழ் அதன் இடம் , காலம் மற்றும் இனத்தின் குறிப்பு இருந்தது. முதல் கதை முதல் தடவை படித்தபோது தெளிவாக புரியவில்லை , மேலும் அது அருவருப்பை கொடுத்தது , இரண்டாவது கதையை தொடர்ந்தேன் , இரு கதைகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளியும் கதையின் போக்கும் மாறுவதை உணர்ந்தேன். நான் குறிப்பிடும் புத்தகம் என்ன என்பதை ஓரளவு ஊகிக்க முடியும் என்று நம்புகிறேன். ஆம்! அது " வால்கா முதல் கங்கை வரை " மதிப்பிற்குரிய ராகுல் சங்கிருத்தியாயன் அவர்களால் எழுதப்பட்டது. தமிழில் கண. முத்தையா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. தொடர்ந்து கதைகளை படிப்பதற்கு முன் புத்தகத்தின் முன்னுரையை படித்தேன். இந்தப் புத்தகம் எதனால் சிறப்பு பெற்றது என்பதையும் ஒவ்வொரு கதை நிகழ்வுகளும் எந்த கருத்தைச் சொல்கிறதோ அதன் மூலநோலின் விவரத்தையும் பதஞ்சல் கவுசல்யாயன் என்ற புத்த மத துறவியும் மாபெரும் அறிஞரும் மிகத் தெளிவான சுரு...

தேடலின் தொடக்கம்

  Date: 06 Mar 2025 நான் இந்த தத்துவ தேடலுக்குள் எப்படி வந்தேன் என்று யோசிக்கும் பொழுது விந்தையாகவே இருக்கிறது. பொறியியல் பட்டமும் அதை சார்ந்த வேலையும் பெரும்பாலான வருடங்களை எடுத்துக் கொண்டது. எனது ஆன்மீக தேடலும் நடுநடுவே இருந்து கொண்டு தான் இருந்தது 2020 வரையிலும் அனேக புராண, கதைகள்,காவியங்கள் மேலோட்டமாகவோ ஆழ்ந்தோ கேட்டு படித்த அனுபவம் சிறிது உள்ளது. இவைகளை ஆய்வு செய்யும் எண்ணம் எனக்கு ஏற்படவே இல்லை எனலாம். பின்னர் என் வாழ்நாளில் பெரும்பான்மையான நேரத்தை தத்துவ தேடலில் நான் கழிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை இதை தற்செயல் என்பதா? நியதி (ஊழ்) என்பதா? கர்ம வினை என்பதா? பிரம்மத்தின் விருப்பம் என்பதா?அல்லது இயற்கையின் அவா என்பதா?  மேலே எழுந்த கேள்விகள் அனைத்தும் ஒவ்வொரு மெய்யிலின் கருகேள்விகள் ஆகும். என் தேடலுக்கும் வாழ்க்கை பாதை மாற்றத்திற்கும் இதுதான் காரணம் என்று ஒன்றை கற்பிக்க முயற்சி செய்ய விருப்பமில்லை. அப்படி ஒரு காரணம் கற்பித்தால் நான் ஏதோ ஒரு தத்துவ இயலில் சிக்கக்கூடும். எது எப்படி ஆனாலும் என் தேடல் தொடரும் என்னுள் இந்த தாக்கம் நீண்ட நாள் இருப்பதாகவே கருதுகிறேன்.