மனைவிக்கு கடிதம் – குடும்பத்தின் தோற்றம் உன்மேல் உள்ள அளவு கடந்த அன்பினால் வரையும் மடல் இது. கணவன் மனைவியாக 16 ஆண்டு காலம் கழித்த இனிமை ததும்பும் நம் வாழ்வில் சில கசப்பான மோதல்களும் சச்சரவுகளும் உள்ளதை நம்மால் மறுக்கவே முடியாது. இந்த முரண்பாடுகள் தான் நம்மையும் நம் குடும்பத்தையும் இயக்கி வருகின்றன. சுகமும் துக்கமும் கலந்தது தான் வாழ்க்கை, “ இதுதான் விதி ” என்று எண்ணி கடந்து செல்ல நாம் சாதாரண கற்பனை உலகில் சஞ்சரிக்கும் மனிதர்கள் அல்ல. நித்தம் மாறும் இவ்வுலகில் நடைமுறையை ஒன்றாக எதிர் நோக்கிய நம் பயணத்தில், வாழ்க்கையை எதார்த்தமாக அணுக நாம் நம்மை பழகிக் கொள்ள முயற்சித்தோம். ஆ! இது சாதாரண காரியமா? இது ஒரு மாபெரும் மாற்றம் என்று எனக்கு உணர்த்தியது. உன்னுள் நடக்கும் கருத்துமோதல், உன் எண்ணத்தை அலைபாய செய்வதை நான் பலமுறை கண்டதுண்டு. வாழ்க்கையை நடைமுறை நிகழ்வாக எண்ணிப் பார்ப்பது என்பதும், பல பழைய விதிகளை தூக்கி எறிவது என்பதும் நாம் தொடங்கிய தாண்டுதலின் ஆரம்ப கட்டம். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் காரணம் என்று கூறப்படுவது நடைமுறையில் ஆராய்ந்தால் அது கற்பிக்கப்பட்ட கார...
என் தேடல்
நான் படித்த சில புத்தகங்களையும் மெய்யியல் அறிஞர்களின் கருத்துக்களையும், என் புரிதலோடு எளிமையான வடிவில் அனைவருக்கும் பகிர விரும்புகிறேன். என் தேடல் தொடரும்.