Skip to main content

Posts

Showing posts from April, 2026

குடும்பத்தின் தோற்றம்

மனைவிக்கு கடிதம் – குடும்பத்தின் தோற்றம் உன்மேல் உள்ள அளவு கடந்த அன்பினால் வரையும் மடல் இது. கணவன் மனைவியாக 16 ஆண்டு காலம் கழித்த இனிமை ததும்பும் நம் வாழ்வில் சில கசப்பான மோதல்களும் சச்சரவுகளும் உள்ளதை நம்மால் மறுக்கவே முடியாது. இந்த முரண்பாடுகள் தான் நம்மையும் நம் குடும்பத்தையும் இயக்கி வருகின்றன. சுகமும் துக்கமும் கலந்தது தான் வாழ்க்கை, “ இதுதான் விதி ” என்று எண்ணி கடந்து செல்ல நாம் சாதாரண கற்பனை உலகில் சஞ்சரிக்கும் மனிதர்கள் அல்ல. நித்தம் மாறும் இவ்வுலகில் நடைமுறையை ஒன்றாக எதிர் நோக்கிய நம் பயணத்தில், வாழ்க்கையை எதார்த்தமாக அணுக நாம் நம்மை பழகிக் கொள்ள முயற்சித்தோம். ஆ! இது சாதாரண காரியமா? இது ஒரு மாபெரும் மாற்றம் என்று எனக்கு உணர்த்தியது. உன்னுள் நடக்கும் கருத்துமோதல், உன் எண்ணத்தை அலைபாய செய்வதை நான் பலமுறை கண்டதுண்டு. வாழ்க்கையை நடைமுறை நிகழ்வாக எண்ணிப் பார்ப்பது என்பதும், பல பழைய விதிகளை தூக்கி எறிவது என்பதும் நாம் தொடங்கிய தாண்டுதலின் ஆரம்ப கட்டம். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் காரணம் என்று கூறப்படுவது நடைமுறையில் ஆராய்ந்தால் அது கற்பிக்கப்பட்ட கார...

பின்நவீனத்துவ மெய்யியல் சில முரண்பாடுகள்

பின்நவீனத்துவ மெய்யியல் சில முரண்பாடுகள் பின்நவீனத்துவம் குறித்த பலதரப்பட்ட கதையாடல்கள் மற்றும் புதுமையான சிந்தனைகள் 40 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து கொண்டு உள்ளது. இதற்கு எதிர்ப்புகள் ஒரு தரப்பில் இருந்து எழுவதாக தெரியவில்லை. ஏனெனில் இது ஒருசாராரின் கட்டமைப்பையோ அல்லது மெய்யியலையோ எதிர்க்கவில்லை , மாறாக பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்துள்ள கட்டுப்பாடுகள் , அடக்குமுறைகள் , பழமைவாதம் , சீரான சிந்தனைவரைமுறை ஆகிய பலதையும் எதிர்க்கிறது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ளாமல் அதை விலக்குகிறது. இதன் பொருள் பின்நவீனத்துவம் பொதுவாக பல எதிர்வாதங்களை ஏற்றுக்கொண்டது என்றே கூறவேண்டும். ஒரு தனித்துவமான பெயரை கொள்ளாத இந்த மெய்யியல், நவீனத்துவத்தின் பிற்பகுதியில் ஏற்பட்டதால் இப்பெயர் கொண்டதா? அல்லது நவீனத்துவத்தை பின்னுக்கு தள்ளுவதே முக்கிய நோக்கமாகக்கொண்டதால் இப்பெயர் வந்ததா? என்ற கேள்வி எழுத்தான் செய்கிறது. நான் எதிர்வாதம் என்ற வார்த்தையை உபயோகித்ததன் காரணம் பல மெய்யியலறிஞர்கள் பதற்றத்தை நம்மால் உணர முடிகிறது. முதலாளித்துவத்தின் பதற்றமோ, எதிர்ப்போ, கண்கூடாக நாம் என்றுமே காணமுடியா...

மொழியில் இயங்கியல்

  மொழியில் இயங்கியல் ஆரம்ப காலங்களில் செயலின் கட்டளைகளாக அல்லது வினைச்சொல்லாக மட்டுமே மொழி இருந்தது. பின்னர் அது இடம் விட்டு இடம் செல்லும் பொழுது, பிராந்திய நிலை நிலவியல் மற்றும் தட்பவெட்ப நிலைகளுக்கு தகுந்தாற்போல் சிற்சில ஒலி மாற்றங்களைக்கொண்டது. இந்த மாற்றங்கள் அனைத்துமே மொழியின் படிநிலை வளர்ச்சி என்று கொண்டால், அது இயக்கவியலின் விதிகளின்படியே செயல்படுகிறது. நாம் இன்றளவும் பலமொழி குடும்பங்களின் ஒப்பீடுகளையும் அதன் ஆராய்ச்சிகளையும் கண்டு வருகிறோம். அதன் உச்சரிப்பு மற்றும் அதன் பொருள் ஆகியவற்றை கொண்டு கூடியவரை ஒத்தவைகளை வைத்து மொழிக்குடும்பங்களாக பிரிக்கிறோம். மொழிகளின் ஆராய்ச்சியில் ஒரு உன்னத கண்டுபிடிப்பு என்பது மொழிகளின் ஒருமைப்பண்பை கொண்டு அதனை குடும்பமாக பிரிப்பது. மொழி என்பது அரசியல் பின்புலத்தில் எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை நாம் நன்றாக அறிவோம். ஆங்கிலேயர் வருகையும், அதற்கு முன்னரே போர்ச்சுகீசிய வருகையில் இந்திய மொழிகளில் மேல் ஈர்ப்பு கொண்டு, அதனை கற்றுக்கொண்டு ஆராயும் விருப்பமுள்ள பல சமய பாதிரியார்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் விருப்பம் சமஸ்கிருதமாக இருந்தது. மதத்தை...