புருகூதன் இடம்: வட்சு நதிக்கரை இனம்: ஹிந்து ஈரானியர் காலம்: கி.மு 2500. கடந்த மூன்று கதைகளிலும் நாம் சமுதாய நோக்கிலேயே அணுகினோம். சமுதாயக் கட்டமைப்பு அதன் பொருள் உற்பத்தி, உறவுகள், வர்க்கம், தொழில்கள்,வாழ்வியல் போன்றவற்றை நாம் பார்த்தோம். இந்த கட்டுரையில் நாம் நிலவியலை பார்க்கலாம். முதலில் தொடங்கிய சமுதாயம் வால்தாய் மலை பள்ளத்தாக்கில் உள்ள வால்கா நதிக்கரை பிரதேசமாக உள்ளது. இவர்கள் இந்தோ-ஐரோப்பியர்கள் போன்டிக் காஸ்பியன்-ஸ்டெஃபி புல்வெளியை சேர்ந்தவர்கள். இவர்கள் வரலாற்றில் புரோட்டோ இந்தோ-ஐரோப்பியர் என குறிப்பிடப்படுவர். இது இந்தோ-ஐரோப்பிய மொழியை பேசும் ஒரு இனக்குழுவை குறிக்கலாம். (ஆரியர்கள் ஒரு இனக்குழு அல்ல என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது ஒரு மொழி பேசும் மக்கள் என்ற அடிப்படையில் மொழியியல் ரீதியாக ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். என்றாலும் இனக்குழுவும் அதன் கிளை மொழிகளும் பிரிக்க முடியாத உறவை கொண்டிருப்பதால் அவர்களை இனக்குழு என்று சில இடங்களில் குறிப்பிட வேண்டி உள்ளது) . ஜெர்மனியர், ஸ்லாவிக், இந்தோ-ஈரானியர் போன்ற 150 க்கும் மேற்பட்ட மொழி குடும்பத்தில் முன்னோ...
நான் படித்த சில புத்தகங்களையும் மெய்யியல் அறிஞர்களின் கருத்துக்களையும், என் புரிதலோடு எளிமையான வடிவில் அனைவருக்கும் பகிர விரும்புகிறேன். என் தேடல் தொடரும்.