Skip to main content

திவா

 திவா 

இடம்: வால்கா நதிக்கரை மத்திய பாகம்   

காலம்: கிமு 3500 

இனம்: ஹிந்தோ- ஸ்லாவியர்கள்.

மனிதனின் பரிணாம வளர்ச்சியை டார்வின் விளக்கியது போலவே மார்க்ஸ், எங்கெஸ்  சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சிகளை பற்றி "குடும்பத்தின் தோற்றம்" என்ற நூலில் விளக்கியுள்ளார்கள். "திவா" காலத்தில் தாய் வழி சமுதாயமாக இருந்தாலும் அது குடும்பம் என்ற நிலையில் இருந்து குலம் மற்றும் இனக்குழு என்ற நிலைக்கு வந்தது. இதை இயக்கவியலில் விளக்கும்போது பொருளின் அளவு மாறும்பொழுது குணத்திலும் மாற்றம் ஏற்படும் என்ற கூற்றை உறுதி செய்கிறது. இனக்குழுவின் அளவிற்கு ஏற்ப தங்கும் இடம், வேட்டை முறை, குடும்ப உறவுகள், பொருள் உபயோகம் மற்றும் குழுவின் முடிவுகள் ஆகியவற்றை சில பரிணாம மாற்றங்கள் நிகழ்வது நிதர்சனமாகும். உணவு தேவைகள் மற்றும் காலநிலை மனிதனை இடமாற்றத்திற்கு தூண்டுகின்றன. மலைகளின் குகைகளில் இருந்த மனிதன் பருவ நிலைக்கு தகுந்தார் போல காடுகளிலும் நதிக்கரை ஓரங்களிலும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டனர். பனிக்காலங்களில் மலை குகைகளிலும், கோடையில் நதிக்கரை ஓரங்களிலும், இளவேனில் காலங்களில் காடுகள் மற்றும் சமவெளி பகுதிகளிலும் அவர்கள் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்கள். வேட்டை விலங்குகள் பருவநிலைக்கு ஏற்ப மாறியது. கோடையில் மீன் பிடித்தல் நன்றாகவும் எளிமையாகவும் அமைந்தது. கால்நடை வளர்ப்பு என்பது அறிமுகமாகாத காலத்தில் வேட்டைக்கு குதிரைகள் வளர்ப்பும், கால்நடை வளர்ப்பும் தாய் வழி சமுதாயத்தின் கடைசி பகுதியில் தோன்றியது. தாய்வழிச் சமுதாயத்தில்  மற்ற  குலங்களோடு உறவு முறை கொள்ளாமல் குடும்பத்திற்குள்ளான உறவுகளே இருந்தது. ஆனால் தலைமுறை தாண்டிய உறவு தடை விதிக்கப்பட்டது. அதாவது பெற்றோர் குழந்தைகள் இடையே உறவு தடுக்கப்பட்டது. தாய்க்கே அதிகாரம் இருந்தாலும் சமுதாயத்தின் முடிவுகளை பொதுக்கூட்டம் மூலம் எடுக்கப்பட்டது. 

வலிமையான அதிக எண்ணிக்கையில் உள்ள மனிதர்களைக் கொண்ட குழுவே ஆதிக்கம் செலுத்தியது. வேட்டையாடுவதில் எல்லை பிரச்சினைகளை போர் மூலமாக அவர்கள் தீர்த்துக் கொண்டனர். தோற்ற குழுக்கள் அடிமைகளாக மாற்றப்படவில்லை மாறாக அவர்கள் அனைவரும், பச்சிளம் குழந்தைகள் முதற்கொண்டு கருணை இல்லாமல் கொல்லப்பட்டனர். இங்கு இரக்கம் கருணை போன்றவைகளின் தேவை இன்னும் ஏற்படவில்லை. அங்கு தன் குழு நலமே பிரதானம் அதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிந்தனர் இந்தப் போர் குணம் தான் சிந்து சமவெளியில் வெளிப்பட்டது. குழுவிற்குள் பொதுநலம் பிரதானமாக இருந்தாலும் ஒட்டுமொத்த குழு என்று வரும்பொழுது அது சுயநலமாகவே செயல்பட்டது இதுவே அக்காலத்தில் மக்களின் உரிமையாகவும் கடமை ஆகவும் இருந்தது. 

போரின் முடிவில் தப்பி ஓடிய (தோற்றக் குழுவினர்) இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். அவர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றினர் அது பெரும்பாலும் நதிக்கரைகளாகவும் சமவெளி பள்ளத்தாக்குகளாகவும் அமைந்தது. தங்கள் கடந்த கால வாழ்வையும், அதன் எச்சங்களையும் போர் மற்றும் எதிரி இனக்குழுவை பற்றியவற்றை நாடோடி பாடல்களாக அவர்கள் தன் தலைமுறை இடம் தங்கள் வாழ்வியலை சொல்லி இருக்கக்கூடும். 

உலக வரலாற்றில் நாடோடி இனக்குழுக்களை பற்றிய செய்திகள் அவர்களின் செவிவழி கதைகள் மற்றும் நாடோடி பாடல்கள் மூலமாகவே நாம் அறிய முடியும். அகழ்வாராய்ச்சி அல்லது குகைச் சிற்பங்கள் போன்ற சான்றுகள் இவர்கள் பற்றிய தகவல்களை அதிகமாக தருவதில்லை. 

குழுவில் உள்ள மக்கள் ஒன்று கூடி மாலை மற்றும் இரவு நேரங்களில் நடனமாடியும் பாடல்கள் பாடியும், குடித்தும், காதல் செய்தும், தங்கள் இரவை கழித்தினர். இதில் இவர்கள் மத்தியில் நெருப்பு உண்டாக்கி அதை சுற்றி நடனமாடும் முறை உள்ளது. நெருப்பின் மூலம் கடவுளைத் தொழுதல் அல்லது குழு நடனம் என்பது குளிர் பிரதேசங்களில் ஒரு வாழ்வியல் கூறாகவே கருத வேண்டி இருக்கிறது. 

வெப்ப மண்டலங்களில் இந்த முறை இருப்பது சாத்தியமில்லாதது. அப்படியும் நாம் இந்த முறைகளை வெப்பமடைந்த பகுதிகளில் பார்த்தோமேயானால், அது புலம்பெயர்ந்த இனக்குழுக்களின் எச்சங்கள் என்று தான் கொள்ள வேண்டும். உதாரணமாக மலைவாசிகள்  இரவு வேலைகளில் பொது வெளியில் நெருப்புமூட்டி அதில் மாமிச உணவுகளை சுட்டு சாப்பிடும் முறை உள்ளது. காலப்போக்கில் அவர்கள் புலம் பெயர்ந்து புறநகரங்களுக்கு வந்தாலும் தன் வாழ்வியல் லட்சங்களை தொடருவது பார்க்க எப்படி இருக்குமோ, அதேபோல்தான் நெருப்பு உண்டாக்கி செய்யப்படும் வேள்விகளையும் நாம் பார்க்க வேண்டி உள்ளது. வேள்விகளில் சொல்லப்படும் ரிசாக்கள் என்பது கவிதைகள் அல்லது நாடோடி பாடல்களாக தலைமுறைகளாய் இருந்த ஒன்று. அதனால் தான் அது ஏற்ற இறக்கங்களுடன் ராகமாக வருகிறது.

Comments

Popular posts from this blog

நிஷா

1. நிஷா  வால்கா நதி பிரதேசம் காலம் கி.மு 6000 இனம் ஹிந்தோ- ஐரோப்பியர் இந்த இடம் மலையும் மலை சார்ந்த பிரதேசமாக உள்ளது. மக்கள் மலை குகைகளில் வசிப்பவர்களாக உள்ளனர்.   தொல்காப்பியத்தின் படி இதை குறிஞ்சி நிலமாக கொள்ளலாம். ஆனால் பனிக்காலத்தில் இதை பாலையாக கருதலாம். இங்குள்ள மக்கள் தாய் வழி சமுதாய அமைப்பை கொண்டவர்களாக ஒரு குடும்பமாக இருந்தனர். அங்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உறவு தாய் தான். தந்தை , சகோதரன் இன்னும் மற்ற உறவுகள் தேவைப்படாத , ஏற்படாத காலம் ஆக இது இருந்தது. இச்சமுதாயத்தின் அனைத்தும் பொது சொத்தாகவே இருந்தது , அதனால் உறவுகள் மற்றும் படிநிலைகள் தேவைப்படவில்லை , அதிகாரம் தாயிடம் இருந்தது. ஏனெனில் அவள் தான் அனைவருக்கும் தாய் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு எந்த பிரிவினையோ , வர்க்கம் என்ற சொல்லோ அதற்கு இடமோ இல்லவே இல்லை. மேலும் செய்யும் செயல் எல்லோருக்கும் பொதுவானது அதனால் வர்ண பேதமும் இங்கு இல்லை. செய்யும் வேலையில் ஆண் பெண் பேதம் இல்லை. காதல் மற்றும் உறவு என்பது ஆண் பெண் இடையே என்றே கொள்ளப்பட்டது. யார் கணவன் என்ற கேள்வி அங்கே கிடையாது. மகனுக்கும் கணவனுக்கு...

தேடலின் தொடக்கம்

  Date: 06 Mar 2025 நான் இந்த தத்துவ தேடலுக்குள் எப்படி வந்தேன் என்று யோசிக்கும் பொழுது விந்தையாகவே இருக்கிறது. பொறியியல் பட்டமும் அதை சார்ந்த வேலையும் பெரும்பாலான வருடங்களை எடுத்துக் கொண்டது. எனது ஆன்மீக தேடலும் நடுநடுவே இருந்து கொண்டு தான் இருந்தது 2020 வரையிலும் அனேக புராண, கதைகள்,காவியங்கள் மேலோட்டமாகவோ ஆழ்ந்தோ கேட்டு படித்த அனுபவம் சிறிது உள்ளது. இவைகளை ஆய்வு செய்யும் எண்ணம் எனக்கு ஏற்படவே இல்லை எனலாம். பின்னர் என் வாழ்நாளில் பெரும்பான்மையான நேரத்தை தத்துவ தேடலில் நான் கழிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை இதை தற்செயல் என்பதா? நியதி (ஊழ்) என்பதா? கர்ம வினை என்பதா? பிரம்மத்தின் விருப்பம் என்பதா?அல்லது இயற்கையின் அவா என்பதா?  மேலே எழுந்த கேள்விகள் அனைத்தும் ஒவ்வொரு மெய்யிலின் கருகேள்விகள் ஆகும். என் தேடலுக்கும் வாழ்க்கை பாதை மாற்றத்திற்கும் இதுதான் காரணம் என்று ஒன்றை கற்பிக்க முயற்சி செய்ய விருப்பமில்லை. அப்படி ஒரு காரணம் கற்பித்தால் நான் ஏதோ ஒரு தத்துவ இயலில் சிக்கக்கூடும். எது எப்படி ஆனாலும் என் தேடல் தொடரும் என்னுள் இந்த தாக்கம் நீண்ட நாள் இருப்பதாகவே கருதுகிறேன்.

வால்கா முதல் கங்கை வரை ஒரு பின்னோட்டம்

  வால்கா முதல் கங்கை வரை ஒரு பின்னோட்டம்.இந்நூலைப் பற்றி பதந்தானந்த கௌசல்யாயன் கொடுத்தது  ஆகச்சிறந்த முன்னுரையாகும். மனித சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமாக இந்த நூல் உள்ளது. கிமு6000 முதல் கிபி1942 வரை உள்ள முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட 20 கதைகள் நம் முன்னே காட்சிபோல உள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகளும் , தத்துவங்களும் , வேதம் மற்றும் உபநிடதங்களும் படித்து அதில் உள்ள சாராம்சத்தை எடுத்து எளிமையான கதைகளாக ராகுல்ஜி நமக்கு கொடுத்திருக்கிறார். நாம் இதை படிக்கும் பொழுது இந்தியதேசத்தில் வடபகுதியில் உள்ள மனித சமுதாயம் எவ்வாறு நாகரிக வளர்ச்சி அடைந்தது என்றும். அவர்களின் பூர்வீகம் எங்கிருந்து என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இன்றைய நிலவரத்தில் கைபர் கணவாய் வழியாக ஆரியர்களின் வருகையை மறுக்கும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு. இந்தப் புத்தகத்தில் வட இந்திய நாகரீகம் மட்டுமே ஆராயப்பட்டுள்ளது, ராகுல்ஜிக்கு தென்னிந்திய-தமிழக தொன்மையான கலாச்சாரமும் பாரம்பரியமும் அறிய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும். அப்பொழுது தமிழ் சம்பந்தமான ஆராய்ச்சிகளும் கட்ட...