Skip to main content

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 1

இக்கட்டுரையில் இன்றைய நிலை பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாம் நிதர்சனத்தை மறந்து பல காலம் வாழ முடியாது. ஒரு நாள் நிதர்சனம் என்ன என்பதை உணர்ந்தே தீருவோம்.

வரலாற்றில் பல இடங்களில் தத்துவத்தோன்றல்கள் இக்கட்டான சூழ்நிலையில் தோன்றின. சில நேர்வழியையும் சில மாற்றுவழியையும் கொண்டது. என்னைப்பொறுத்தவரை நேர்வழி என்பது உலகம் வழி மனம். மாற்றுவழி என்பது மனம் வழி உலகம். சிலநேரங்களில் தோன்றிய சிந்தனைகள் விரக்தி ரூபங்களாகவே இருந்தன, குறிப்பாக இந்தியா மற்றும் ஐரோப்பியசிந்தனைகள் தர்க்கசிந்தனைகளாக சில காலம் கைகொடுத்தாலும், அவை யதார்த்தமான உலகக்காண மறுத்தது, மறந்தது. இவையெல்லாம் கண்ணைமூடி உலகைக்காண சொல்லிக்கொடுத்தது. மனம் வழி உலகம் புலன்களை சந்தேகிக்கச்சொல்லியது. மனிதன் தொடர்ந்து துக்கத்தைக்காணும் பொழுதும், தோல்வி மற்றும் மரணத்தை காணும் பொழுதும் அவன் எல்லாவற்றிலும் நம்பிக்கை இழக்கிறான் என்றும் எதையும் செய்யத் துணிகிறான் என்றும், இருந்தும் வாழ்க்கையை அனுபவிக்க எத்தனிக்கிறோம் என்றும் வரலாற்றில் பல இடங்களில் காண்கிறோம். ஏதன்ஸ் நகரில் பெலோப்பொனோசிய யுத்தத்திற்கு பின் இந்நிலை ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இந்து புராணக்கதைகளில் ஒரு மனிதன் காட்டு வழியாக வரும் வழியில் தடுமாறி இடறி விழுகிறான், உருண்டு சென்று ஒரு மரத்தின் வேரைப்பற்றுகிறான். கீழே பலஅடி ஆழம் அதில் விஷம் நிறைந்த நாகங்கள் படமெடுத்து ஆடும் காட்சி, இவன் பற்றிய வேரை, எலி ஒன்று மெதுவாக அறுத்து தின்று கொண்டிருக்கிறது. கையின் பலம் மெதுவாகக்குறைகிறது, கை லேசாக வழுக்குகிறது. அந்நேரம் மரக்கிளையில் உள்ள தேன்கூட்டிலிருந்து இவன் அருகே ஒருசில தேன்துளிகள் சொட்டுகின்றன, அதை தன் நாவை நீட்டி சுவைக்கிறான். இக்கதை நடைமுறை வாழ்வுடன் ஒப்பிட்டு நற்கதிக்குண்டான வழியாக போதிக்கப்படுகிறது. அந்நிலையில் தேன்துளியை அருந்துவதென்பது நிகழ்காலத்தில் இருப்பதல்லவா? இது அனர்த்தம் என்றும் கடவுள் சிந்தனை வேண்டும் என்றும் இந்திய தத்துவியலில் ஒரு பகுதியினர் பறைசாற்றுகிறார்கள். உபநிடத சாரமாகிய பகவத்கீதையும் அப்படியே சொல்கிறது. இதற்குப் பிரமாணமாக பாகவதத்தில் ஜடபரதோபாக்யானம் கூறப்படுகிறது.

நான்கு பக்கத்திலும் அடி விழும் பொழுது அறிவு பக்தியை சரணடையும் என்று கூறியது, நமது இந்தியாவின் முதல் ஜனாதிபதியும் தத்துவ பேராசிரியருமான சர் ராதாகிருஷ்ணன் ஆவார். இந்துதத்துவவியல் என்பது கீழ்கண்ட கூறுகளை நன்றாக உணர்ந்த பின், அதன் ஊடாக உரு பெற்று வளர்ந்தது.

·          மனித மனம் எப்படிப்பட்டது?

·          மன சிந்தனை எப்படி வடிவமைகிறது?

·          மனதின் உறுதிக்கு எது எல்லை?

·          மனச்சிந்தனையை எப்படி மடைமாற்றம் செய்கிறார்கள்?

·          மனம் எதை நம்பும்?

·          அறிவின் மேல் மனம் படர்தல்

·          பொதுச் சிந்தனைக்கு பூட்டு

·          அதிகார அமைப்பின் பங்கு

·          எது தர்மம்?

இக்கூறுகளை ஒவ்வொன்றாக விரிவாக பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

நிஷா

1. நிஷா  வால்கா நதி பிரதேசம் காலம் கி.மு 6000 இனம் ஹிந்தோ- ஐரோப்பியர் இந்த இடம் மலையும் மலை சார்ந்த பிரதேசமாக உள்ளது. மக்கள் மலை குகைகளில் வசிப்பவர்களாக உள்ளனர்.   தொல்காப்பியத்தின் படி இதை குறிஞ்சி நிலமாக கொள்ளலாம். ஆனால் பனிக்காலத்தில் இதை பாலையாக கருதலாம். இங்குள்ள மக்கள் தாய் வழி சமுதாய அமைப்பை கொண்டவர்களாக ஒரு குடும்பமாக இருந்தனர். அங்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உறவு தாய் தான். தந்தை , சகோதரன் இன்னும் மற்ற உறவுகள் தேவைப்படாத , ஏற்படாத காலம் ஆக இது இருந்தது. இச்சமுதாயத்தின் அனைத்தும் பொது சொத்தாகவே இருந்தது , அதனால் உறவுகள் மற்றும் படிநிலைகள் தேவைப்படவில்லை , அதிகாரம் தாயிடம் இருந்தது. ஏனெனில் அவள் தான் அனைவருக்கும் தாய் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு எந்த பிரிவினையோ , வர்க்கம் என்ற சொல்லோ அதற்கு இடமோ இல்லவே இல்லை. மேலும் செய்யும் செயல் எல்லோருக்கும் பொதுவானது அதனால் வர்ண பேதமும் இங்கு இல்லை. செய்யும் வேலையில் ஆண் பெண் பேதம் இல்லை. காதல் மற்றும் உறவு என்பது ஆண் பெண் இடையே என்றே கொள்ளப்பட்டது. யார் கணவன் என்ற கேள்வி அங்கே கிடையாது. மகனுக்கும் கணவனுக்கு...

தேடலின் தொடக்கம்

  Date: 06 Mar 2025 நான் இந்த தத்துவ தேடலுக்குள் எப்படி வந்தேன் என்று யோசிக்கும் பொழுது விந்தையாகவே இருக்கிறது. பொறியியல் பட்டமும் அதை சார்ந்த வேலையும் பெரும்பாலான வருடங்களை எடுத்துக் கொண்டது. எனது ஆன்மீக தேடலும் நடுநடுவே இருந்து கொண்டு தான் இருந்தது 2020 வரையிலும் அனேக புராண, கதைகள்,காவியங்கள் மேலோட்டமாகவோ ஆழ்ந்தோ கேட்டு படித்த அனுபவம் சிறிது உள்ளது. இவைகளை ஆய்வு செய்யும் எண்ணம் எனக்கு ஏற்படவே இல்லை எனலாம். பின்னர் என் வாழ்நாளில் பெரும்பான்மையான நேரத்தை தத்துவ தேடலில் நான் கழிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை இதை தற்செயல் என்பதா? நியதி (ஊழ்) என்பதா? கர்ம வினை என்பதா? பிரம்மத்தின் விருப்பம் என்பதா?அல்லது இயற்கையின் அவா என்பதா?  மேலே எழுந்த கேள்விகள் அனைத்தும் ஒவ்வொரு மெய்யிலின் கருகேள்விகள் ஆகும். என் தேடலுக்கும் வாழ்க்கை பாதை மாற்றத்திற்கும் இதுதான் காரணம் என்று ஒன்றை கற்பிக்க முயற்சி செய்ய விருப்பமில்லை. அப்படி ஒரு காரணம் கற்பித்தால் நான் ஏதோ ஒரு தத்துவ இயலில் சிக்கக்கூடும். எது எப்படி ஆனாலும் என் தேடல் தொடரும் என்னுள் இந்த தாக்கம் நீண்ட நாள் இருப்பதாகவே கருதுகிறேன்.

மெய்யியல்பார்வை

  மெய்யியல்பார்வை இத்தனை வருடகால வரலாற்றையும் சமுதாய வளர்ச்சியையும் ஒரு மனிதன் தனது வாழ்நாளில் புரிந்து கொள்ள முடியுமா என்பது வியப்பளிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஏதோ ஒரு விதத்தில் தன் எச்சங்களை விட்டுத்தான் செல்கிறன். அதனை அவன் வழியில் வந்தவர்களோ, அல்லது உண்மை அறிவு தேடுபவர்களோ, தேவையின் பொருட்டு, அதை ஒரு கருத்தாகவோ விசயமாகவோ கருதலாம் அல்லது விட்டு விடலாம். இந்த நிகழ்ச்சி பிரவாகம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி என் மனதில் தோன்றி கொண்டுதான் இருக்கிறது. ஒரு மனிதன் தன் புலன்களைக் கொண்டு நன்றாக தேடிய விசயம் அறிவு என்றால் அதை ஆராய்ந்து பார்த்து அதை பயன்படுத்தி பின்னர் தம்மாலும் மற்றவர்களாலும் எல்லா நாட்டிலும் எல்லா காலங்களிலும் உறுதிப்படக்கூடியது தான் விஞ்ஞானம். இன்று நாம் பயன்படுத்தும் நியூட்டனின் கோட்பாடுகள், தேல் தேற்றங்கள், கணிதம்   ஆகியவை இதன் சான்றுகள். இதனைக் கண்டு மலைத்த சிலர் இவை அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்திலே இருக்கிறது அதை லோகாயதசக்தி மறைத்து வைத்திருக்கிறது என்று வியக்கின்றனர். ஏன் இதை கண்டுபிடித்தவரே கூட வியப்பில் ஆள்வதும் உண்டு. அதை இத்தோடு நிறுத்திக் கொண்...