Skip to main content

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 2

 மனித மனம் எப்படிப்பட்டது?

 இன்றைய நிலையில் மனிதமனம் தன்தேவைகளை குறித்து பெரும்பாலும் சிந்திக்கிறது. அது ஆசையாகவும் இருக்கலாம் தேவையாகவும் இருக்கலாம் சிக்கல் இங்கேயே ஆரம்பிக்கிறது. இந்துதத்துவவியல் மனம் ஆசையை வெல்லும் என்றும் புலனடக்கம் தேவை என்றும் பறைசாற்றும். எண்ணற்ற உதாரணங்களும் புராண நிகழ்வுகளும் இதற்கு சான்றாக கொடுக்கப்படுகிறது (ஆனால் புலனடக்கம் எல்லோருக்குமானதாக நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது). இந்தத் தேவை அல்லது ஆசையால் தூண்டப்பட்ட மனம் அதை அடைய தவிக்கிறது. மனம் மென்மேலும் துன்பங்களை விரும்புவதில்லை, அது இன்பத்தையே நாடுகிறது. மனம் ஏதோ ஒரு லஹரியில் இருக்க விரும்புகிறது. மனம் பணம், துணை, அதிகாரம், செல்வாக்கு என்று ஏதாவது ஒன்றை தேடுகிறது. அதை அடைய ஆவலடைகிறது. மனம் போற்றுதலுக்குரிய சூழ்நிலையில் வாழ விரும்புகிறது. மனம் குறைந்த உழைப்பையும் அதிக பலனையும் விரும்புகிறது.இந்தத்தேவை, ஆசை, இன்பம், துன்பமின்மை, லஹரி, பணம், அதிகாரம், செல்வாக்கு, போற்றுதல், குறைந்து உழைப்பில் அதிக பலன் இவை எல்லாம் ஒரு புள்ளியில் சேர எல்லாம் கிடைக்கும் இடமாக உள்ள ஒரு பொருளை மனம்முழுமையாக நம்புகிறது.உதாரணம் இறையை வணங்கும் ஒருவன் தன் தேவையின் அளவுக்கு ஏற்ப இறையின் சக்தியை நிர்ணயிக்கிறான்.

 மனச்சிந்தனை எப்படி வடிவமைகிறது?

 தேவையை எதிர்கொள்ள மனம் பல யுக்திகளை கையாளுகிறது. தான் விரும்பிய வழியிலேயே அதை செய்யவும் விரும்புகிறது. தன்தகுதி தெரிந்து அதையுணர்ந்து பெருக்க முயற்சி செய்யத்தூண்டுவதே நல்வழி, அது எல்லா நேரமும் எல்லோருக்கும் நடப்பதில்லை. எளிமையான வலியில்லாத வழியில் அது தேவைகளை பூர்த்தி செய்ய விரும்புகிறது. ஒருவகையில் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இதுதான் இருக்கிறது, என்றாலும் மனம் பொருளை அடைய பல வழிமுறைகளை கையாளுகிறது. இதனால் சகமனித உறவு, உரிமை இவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை சீரமைக்கவே தர்மம் என்ற ஒரு கயிறு நம்மை சுற்றிகட்டப்பட்டது. சில நேரங்களில் இந்தக்கயிறும் நம்மை இறுக்கத்தொடங்கியது. தமிழ் இலக்கியங்களில் கொடுக்கப்பட்ட அறம் என்பது இதிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும்.

 மனிதமனதின் உறுதிக்கு எது எல்லை?

இங்கு மனஉறுதி என்பது எந்த அர்தத்தில் கொள்ளவேண்டுமென்று விளக்க விரும்புகிறேன். மனஉறுதி என்பது நல்வழியில் நடப்பது என்று கொள்ளலாமா? மன உறுதியை எளிமையாக சர்.ராதாகிருஷ்ணன் முற்பகுதியில் விளக்கியதைப் போல கொள்ளலாமா? அறிவு பக்தியின் பாதம் தொடுவதே மன உறுதியின் எல்லை என்று அவர் சொல்லாமல் சொல்கிறார்.இன்று பக்தியில் உள்ள அனைவரும் மன உறுதியின் எல்லையை அடைந்தவர்களாக? ஆம் என்று நான் கூறுவேன். அப்படியானால் பக்தியில் சரணடைந்ததும் மன உறுதி இல்லாமல் போய்விடுமா? அறிவின் சரணாகதி மனஉறுதியின் எல்லை என்றால், அதன் பின் அறிவு யதார்த்த புலன்வழியில் வேலைசெய்வதில்லை. ஆனால் மனம் வேறு பரிணாமத்தை கொண்டு வேறு அளவுகளில் உருமாறுகிறது. இங்கு மனஉறுதி நம்பிக்கை சார்ந்ததல்ல அந்தக்கட்ட முடிந்துவிட்டது. இப்பொழுது மனஉறுதி என்பது நம்பியஒன்றை கொண்டு தேவையானதை அடைவது மட்டுமே.

உதாரணம்: மரக்கிளையில் தொங்கும் ஒருவன் மரக்கிளை ஒடிந்து கீழேவிழும் முன் மற்றொரு கிளையை பற்றுவது இயல்பு. நாம் யதார்த்தத்தை விரும்புவதில்லையே! என்ன செய்வது? அவன் கண்ணைமூடி தன் மனதில் ஜோதிஸ்வரூபமான பிரம்மத்தை, கிருஷ்ணனை, சிவனை, விஷ்ணுவை, தேவியை இன்னும் எல்லா புகைப்படங்களும் அவன் கண்முன்னே வந்தன. ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து மனஒருநிலையில் தொங்கி கொண்டிருப்பானேயாயில் அதுதான் மனஉறுதியின் எல்லை. என்ன அதை அடைய நீங்கள் தயாரா? அவன் வாழ்வில் இரண்டு முடிவுகள், ஒன்று அவன் புஷ்பகவிமானத்தில் வைகுண்டம், சிவலோகம், சொர்க்கம் எங்காவது செல்வது, இல்லையேல் கைகால் உடைந்து நடமாட முடியாமல் இருப்பது. இப்பொழுது அவரிடம் நீ மற்றொரு கிளையை பிடிக்கலாமல்லவா என்றுகேட்டால் அவன் என்ன சொல்லிப்பான்?. நான் வணங்கிய தெய்வம் என்னை இத்தோடு காப்பாற்றியது, இல்லையென்றால் என்னை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. இதுதான் மனஉறுதியின் பரிணமித்த நிலை அவனுக்கு என் அனுதாபங்கள். குமரிலபட்டர் கதையும் இதுபோல ஒன்றுதான். உங்கள் வாழ்வில் என்றாவது ஒரு நாள் இது போன்ற நபரை சந்தித்து இருப்பீர்கள், அவர்கள் நடக்காத ஒரு மாபெரும் துன்பசம்பவத்தை இன்றைய நிலையில் தொடர்புபடுத்தி, உங்களுக்கு ஆறுதல் சொல்வார்கள் (Hypothetical Narrative). ஆண்டாண்டுகாலமாய் இந்த யுக்தி உதவி கொண்டுதான் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

நிஷா

1. நிஷா  வால்கா நதி பிரதேசம் காலம் கி.மு 6000 இனம் ஹிந்தோ- ஐரோப்பியர் இந்த இடம் மலையும் மலை சார்ந்த பிரதேசமாக உள்ளது. மக்கள் மலை குகைகளில் வசிப்பவர்களாக உள்ளனர்.   தொல்காப்பியத்தின் படி இதை குறிஞ்சி நிலமாக கொள்ளலாம். ஆனால் பனிக்காலத்தில் இதை பாலையாக கருதலாம். இங்குள்ள மக்கள் தாய் வழி சமுதாய அமைப்பை கொண்டவர்களாக ஒரு குடும்பமாக இருந்தனர். அங்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உறவு தாய் தான். தந்தை , சகோதரன் இன்னும் மற்ற உறவுகள் தேவைப்படாத , ஏற்படாத காலம் ஆக இது இருந்தது. இச்சமுதாயத்தின் அனைத்தும் பொது சொத்தாகவே இருந்தது , அதனால் உறவுகள் மற்றும் படிநிலைகள் தேவைப்படவில்லை , அதிகாரம் தாயிடம் இருந்தது. ஏனெனில் அவள் தான் அனைவருக்கும் தாய் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு எந்த பிரிவினையோ , வர்க்கம் என்ற சொல்லோ அதற்கு இடமோ இல்லவே இல்லை. மேலும் செய்யும் செயல் எல்லோருக்கும் பொதுவானது அதனால் வர்ண பேதமும் இங்கு இல்லை. செய்யும் வேலையில் ஆண் பெண் பேதம் இல்லை. காதல் மற்றும் உறவு என்பது ஆண் பெண் இடையே என்றே கொள்ளப்பட்டது. யார் கணவன் என்ற கேள்வி அங்கே கிடையாது. மகனுக்கும் கணவனுக்கு...

தேடலின் தொடக்கம்

  Date: 06 Mar 2025 நான் இந்த தத்துவ தேடலுக்குள் எப்படி வந்தேன் என்று யோசிக்கும் பொழுது விந்தையாகவே இருக்கிறது. பொறியியல் பட்டமும் அதை சார்ந்த வேலையும் பெரும்பாலான வருடங்களை எடுத்துக் கொண்டது. எனது ஆன்மீக தேடலும் நடுநடுவே இருந்து கொண்டு தான் இருந்தது 2020 வரையிலும் அனேக புராண, கதைகள்,காவியங்கள் மேலோட்டமாகவோ ஆழ்ந்தோ கேட்டு படித்த அனுபவம் சிறிது உள்ளது. இவைகளை ஆய்வு செய்யும் எண்ணம் எனக்கு ஏற்படவே இல்லை எனலாம். பின்னர் என் வாழ்நாளில் பெரும்பான்மையான நேரத்தை தத்துவ தேடலில் நான் கழிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை இதை தற்செயல் என்பதா? நியதி (ஊழ்) என்பதா? கர்ம வினை என்பதா? பிரம்மத்தின் விருப்பம் என்பதா?அல்லது இயற்கையின் அவா என்பதா?  மேலே எழுந்த கேள்விகள் அனைத்தும் ஒவ்வொரு மெய்யிலின் கருகேள்விகள் ஆகும். என் தேடலுக்கும் வாழ்க்கை பாதை மாற்றத்திற்கும் இதுதான் காரணம் என்று ஒன்றை கற்பிக்க முயற்சி செய்ய விருப்பமில்லை. அப்படி ஒரு காரணம் கற்பித்தால் நான் ஏதோ ஒரு தத்துவ இயலில் சிக்கக்கூடும். எது எப்படி ஆனாலும் என் தேடல் தொடரும் என்னுள் இந்த தாக்கம் நீண்ட நாள் இருப்பதாகவே கருதுகிறேன்.

மெய்யியல்பார்வை

  மெய்யியல்பார்வை இத்தனை வருடகால வரலாற்றையும் சமுதாய வளர்ச்சியையும் ஒரு மனிதன் தனது வாழ்நாளில் புரிந்து கொள்ள முடியுமா என்பது வியப்பளிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஏதோ ஒரு விதத்தில் தன் எச்சங்களை விட்டுத்தான் செல்கிறன். அதனை அவன் வழியில் வந்தவர்களோ, அல்லது உண்மை அறிவு தேடுபவர்களோ, தேவையின் பொருட்டு, அதை ஒரு கருத்தாகவோ விசயமாகவோ கருதலாம் அல்லது விட்டு விடலாம். இந்த நிகழ்ச்சி பிரவாகம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி என் மனதில் தோன்றி கொண்டுதான் இருக்கிறது. ஒரு மனிதன் தன் புலன்களைக் கொண்டு நன்றாக தேடிய விசயம் அறிவு என்றால் அதை ஆராய்ந்து பார்த்து அதை பயன்படுத்தி பின்னர் தம்மாலும் மற்றவர்களாலும் எல்லா நாட்டிலும் எல்லா காலங்களிலும் உறுதிப்படக்கூடியது தான் விஞ்ஞானம். இன்று நாம் பயன்படுத்தும் நியூட்டனின் கோட்பாடுகள், தேல் தேற்றங்கள், கணிதம்   ஆகியவை இதன் சான்றுகள். இதனைக் கண்டு மலைத்த சிலர் இவை அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்திலே இருக்கிறது அதை லோகாயதசக்தி மறைத்து வைத்திருக்கிறது என்று வியக்கின்றனர். ஏன் இதை கண்டுபிடித்தவரே கூட வியப்பில் ஆள்வதும் உண்டு. அதை இத்தோடு நிறுத்திக் கொண்...